ஐதராபாத்,
படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ரசித்தேன். என்னவொரு அற்புதமான நடிப்பு. இந்தத் தகுதியான வெற்றிக்கு, முழு நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ரவி தேஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘இருமுடி’. இப்படத்தை இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கியுள்ளார். வெளியானது முதலே இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.
தனது வழக்கமான மாஸ் ஹீரோ இமேஜை முழுமையாக ஒதுக்கி வைத்து, மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் இருந்த ரவி தேஜாவுக்கு, ‘இருமுடி’ திரைப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று தந்துள்ளது. உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
ரவி தேஜாவின் திரைப்பயணத்திலேயே மிக வேகமாக ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த திரைப்படம் என்ற பெருமையை ‘இருமுடி’ பெற்றுள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். நக்ஷத்ரா என்ற குழந்தையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
இந்த நிலையில், ரவி தேஜாவின் ‘இருமுடி’ படத்தை பாராட்டி நடிகர் சிரஞ்சீவி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில்,“ ‘இருமுடி’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு என் அன்பு சகோதரர் ரவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ரசித்தேன். என்னவொரு அற்புதமான நடிப்பு .ரவி தேஜா, திரிநாத் கதாபாத்திரத்தை முழுவதுமாக உங்கள் தோள்களில் சுமந்தீர்கள்.
இயக்குநர் சிவா நிர்வாணா, இவ்வளவு ஆழத்துடனும் உணர்ச்சியுடனும் படத்தை வழங்கியதன் மூலம் ஒரு அற்புதமான வேலையைச் செய்துள்ளீர்கள். குழந்தை நக்ஷத்ராவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு என் ஆசீர்வாதங்கள். இந்தத் தகுதியான வெற்றிக்கு, முழு நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும், மைத்திரி புரொடக்ஷன் கம்பெனியின் தயாரிப்பாளர்களான நவீன் யெர்னேனி மற்றும் ரவி சங்கர் ஆகியோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு படத்தின் வெற்றி என்பது திரையுலகில் உள்ள அனைவருக்கும் ஒரு கொண்டாட்டமாகும். இந்தத் திரையுலகம் அனைவருக்கும் உரியது... ஒரு சிலருக்கு மட்டும் அல்ல. நாம் வாழ வேண்டும்... நாம் மற்றவர்களுக்காக வாழ வேண்டும்!” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.