சினிமா செய்திகள்

தனது வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மனம் திறந்த நடிகர் பரத்

பரத் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா கேரியர் பற்றி பேசினார்.

பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகர் பரத். காதல், எம்டன் மகன் என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பரத்திற்கு அதன்பிறகு வந்த படங்கள் அடுத்தடுத்து சறுக்கியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. தற்போது, சிறிது இடைவெளிக்கு பிறகாக காளிதாஸ் -2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், பரத் அளித்த பேட்டி ஒன்றில் தனது சினிமா கேரியர் பற்றி பேசினார். அப்போது பரத்திடம் வீழ்ச்சியை சந்தித்தது ஏன்? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பரத் கூறியதாவது: - "நான் காதல், வெயில், பிப். 14, எம். மகன் உள்பட பல ஹிட்களை கொடுத்திருக்கிறேன். எனினும், என்னுடைய கெட்ட நேரம், 555 திரைப்படத்திற்கு சரியான புரோமோஷன் இல்லாமல் தலைவா திரைப்பட வெளியீட்டு பிரச்சினைக்கு நடுவே வெளியானது.

அப்படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்து கடுமையாக உழைத்தேன். நேபாளி திரைப்படமும் ஏ சான்றிதழ் பெற்று சம்திங் சம்திங் திரைப்படத்துடன் வெளியாகி தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகும், நல்ல படங்களில் நடித்தேன். ஆனால், சரியான வெளியீட்டுத் தேதியும் புரோமோஷனும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.