சினிமா செய்திகள்

சிரிப்பு காட்ற நமக்கு எதுக்குப்பா சிக்ஸ் பேக்: நடிகர் யோகி பாபு கலகல பேச்சு

சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் நடிகர் யோகி பாபு கலந்து கொண்டு பேசினார்.

சென்னை,

தமிழ்நாடு விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டுகால சாதனைகளை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ஆப் தமிழ்நாடு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ஆர்யா, யோகி பாபு மற்றும் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் உள்ளிட்ட ஏராளமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் யோகி பாபு, இளம் வயதில் கால்பந்து விளையாடி வாய்ப்புக்காக காத்துக்கிடந்தது பற்றியும் நெகிழ்ச்சியாக பேசினார். நிகழ்ச்சி தொகுப்பாளர் யோகி பாபுவிடம், “இப்போ கொஞ்சம் ஒல்லியாக இருக்கீங்க… சிக்ஸ் பேக் ட்ரை பண்ணுறீங்க போல?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த யோகி பாபு, “சிரிப்பு காட்டுற நமக்கு எதுக்குப்பா சிக்ஸ் பேக். கிடைக்கிற வாய்ப்பை வச்சி காலத்தை தள்ளிட்டு போயிடலாம். அப்பப்போ ஷூட்டிங் ஸ்பாட்டில் விளையாடுவோம், அவ்வளவுதான்” என்றார்.

தொடர்ந்து பேசிய யோகி பாபு, “சேப்பாக்கத்தில் கிரிக்கெட்டிற்காக முயற்சி பண்ணிருக்கேன். சிஎஸ்கே மேட்ச் ஆடினால் முதல் கமெண்டேட்டராக போவேன். அங்க வெளியே நின்னு இருக்கேன். உழைப்புதான் எல்லாமே… நிறைய பேருக்கு நீங்க (உதயநிதி ஸ்டாலின்) உதவி பண்ணிட்டு இருக்கீங்க… இன்னும் நிறைய பண்ணுங்க” என்றார்.