சினிமா செய்திகள்

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்? மனம் திறந்த சாய் பல்லவி

சாய் பல்லவியிடம், வருங்கால வாழ்க்கைத் துணையிடம் என்னென்ன குணங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

நல்ல குணம் கொண்டவராக இருப்பதுடன், சமையலும் தெரிந்திருக்க வேண்டும் என்று சாய் பல்லவி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

தனது வருங்கால வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நடிகை சாய் பல்லவி மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, நல்ல குணம் கொண்டவராக இருப்பதுடன், சமையலும் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. நடிகை சாய் பல்லவி தற்போது நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படத்தில் சீதையாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். படம் வரும் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது புரோமஷன் பணிகளில் ராமாயணா படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அமிதாப் பச்சன் கேள்வி

இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் 'கோன் பனேகா குரோர்பதி 18' நிகழ்ச்சியில் சாய் பல்லவி தனது பட சக நடிகர்களான ரன்பீர் கபூர், ரவி துபே ஆகியோருடன் பங்கேற்றார். அப்போது சாய் பல்லவியிடம், வருங்கால வாழ்க்கைத் துணையிடம் என்னென்ன குணங்களை எதிர்பார்க்கிறீர்கள் என்று அமிதாப் பச்சன் கேள்வி எழுப்பினார்.

முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும்

இதற்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது: முதலில் அவர் நல்ல மனிதராக இருக்க வேண்டும். தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பவராக இல்லாமல், தனது செயல்களை தானே சுயபரிசோதனை செய்து கொள்ளும் குணம் கொண்டவராக இருக்க வேண்டும். தவறு செய்வது இயல்புதான். ஆனால், அந்த தவறை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும். தனது தவறுகளுக்கு மற்றவர்களைக் குறை கூறக்கூடாது ” என்றார். மேலும், தனது வருங்கால கணவருக்கு சமையல் தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் என்றும் சாய் பல்லவி நகைச்சுவையாக கூறினார்.

மேலும்,'ராமாயணம்' படத்தில் சீதையாக நடித்த அனுபவம் குறித்தும் சாய் பல்லவி பேசினார். இது குறித்து சாய்பல்லவி கூறியதாவது: பொதுவாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரத்துக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்றுதான் சிந்திப்பேன். ஆனால், சீதையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது, இந்த கதாபாத்திரத்தின் மூலம் தான் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம் என்று சிந்தித்தேன்” என்றார்.

SCROLL FOR NEXT