சினிமா செய்திகள்

தனுஷ் – மம்மூட்டி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும்? மனம் திறந்த ராஜ்குமார் பெரியசாமி

தனுஷ் – மம்மூட்டி கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும்? ‘ஓம்’ படத்தின் ரகசியங்களை வெளியிட்டார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

சென்னை,

தனுஷ், மம்மூட்டி இணைந்து நடிக்கும் ‘ஓம்’ திரைப்படம் குறித்தும், தனுஷ் – ஸ்ரீலீலா நடனமாடுவது போன்ற புகைப்படங்கள் குறித்தும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தனுஷின் ‘ஓம்’ திரைப்படம்

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘ஓம்’. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டு பாகங்களாக உருவாகும் திரைப்படத் தொடரின் முதல் பாகமாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற 20ந் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் – மம்மூட்டி கெமிஸ்ட்ரி

இந்த நிலையில், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதாவது, தனுஷ் மற்றும் மம்மூட்டி இடையிலான கெமிஸ்ட்ரி குறித்துப் பேசிய அவர், இருவருக்கும் இடையே வலுவான புரிதல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், கதாபாத்திரங்களுக்கு இடையிலான அந்தத் தொடர்பை வெளிப்படுத்துவதற்கு சரியான நடிகர்கள் தேவைப்பட்டதாகவும், அதனால்தான் மம்மூட்டி மற்றும் சாய் பல்லவியைத் தேர்வு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தனுஷ் – மம்மூட்டி கூட்டணியைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தனுஷ் – ஸ்ரீலீலா நடனப் பாடல் இருக்கிறதா?

இப்படத்தில் தனுஷும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடனமாடுவது போன்ற புகைப்படங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவின. இதனால் படத்தில் இருவருக்கும் இடையே நடனப் பாடல் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு விளக்கமளித்த இயக்குநர், "தனுஷ் சாரும் ஸ்ரீலீலாவும் இணைந்து நடனமாடுவது போன்ற ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்த்தேன். ஆனால், படத்தில் அப்படியொரு பாடல் கிடையாது. 'அலாகலோவா' பாடல் படத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதல்ல. கதையின் சூழலுக்கு அந்தப் பாடல் தேவைப்பட்டது. அதுதான் படத்தில் இடம்பெறும் ஒரே நடனப் பாடல்" என்று தெரிவித்துள்ளார்.

திருப்பதி – திருவண்ணாமலை பின்னணியில் கதை

தொடர்ந்து படத்தின் தலைப்பு குறித்து விளக்கிய இயக்குநர், திருப்பதி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு கோவில் நகரங்களுக்கு இடையே கதை நடைபெறுவதாகக் கூறியுள்ளார். மேலும், சாய் பல்லவி ஏற்று நடித்துள்ள நித்யா ரெட்டி கதாபாத்திரம் 'ஓம்' என்ற பெயரில் ஒரு ஆபரேஷனை ஏற்பாடு செய்வதாகவும், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஆன்மிகம் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT