சினிமா செய்திகள்

``எப்போ கட்சி ஆரம்பிக்க போறீங்க?''... நடிகர் தனுஷ் கொடுத்த ரியாக்‌ஷன்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் நடிகர் தனுஷிடம், “எப்போது கட்சி ஆரம்பிக்கப் போறீங்க?” என கேள்வி எழுப்பினர்.

ஆலந்தூர்,

72-வது தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட பின்னர் நடிகர் தனுஷ் விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் புதிய கட்சி குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, நடிகர் தனுஷ் எந்த பதிலும் அளிக்காமல் சிரித்துக்கொண்டே காரில் ஏறிச்சென்றார்.

ரசிகர் மன்றத்தில் தனுஷ் கவனம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே நேரத்தில், தனது ரசிகர் நற்பணி மன்றத்தையும் வலுப்படுத்துவதில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ் ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மன்ற நிர்வாகிகளையும் தனுஷ் அவ்வப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அரசியல் இயக்கமாக மாற்ற திட்டமா?

இதற்கிடையில், தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும், ரசிகர் மன்றத்தை எதிர்காலத்தில் அரசியல் இயக்கமாக மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும், தனுஷ் தரப்பில் இதுவரை அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 தேசிய விருது

இதற்கிடையில், குஜராத்தில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடமிருந்து 'கேப்டன் மில்லர்', 'ராயன்' ஆகிய 2 படத்துக்காக தேசிய விருதைப் பெற்றுக்கொண்டார்.

புதிய கட்சி எப்போது?

அதனைத் தொடர்ந்து, விமானம் மூலம் நடிகர் தனுஷ் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் தேசிய விருது பெற்றது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், 'தேசிய விருது பெற்றது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது ஒரு பெரிய கவுரவம்' என தெரிவித்தார். மேலும், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் சிரித்துக்கொண்டே காரில் ஏறிச்சென்றார்.

SCROLL FOR NEXT