சினிமா செய்திகள்

புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும் - நடிகர் தனுஷ் பேச்சு

மக்கள் என் பக்கம் உள்ளனர். என்னை இயக்குவது இறைவன் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்து முதல்-அமைச்சராகி உள்ளார். இதனால் பிற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வர ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நடிகர் தனுஷ் அரசியல் கட் சிதொடங்கப்போவதாக செய்தி வெளியாகி உள்ளது. அவரது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றிவிட்டார். தேர்தல் ஆணையத்திலும் கட்சியின் பெயரை பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சென்னையில் ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள் வதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். ரசிகர்கள் மத்தியில் தனுஷ் பேசும் “நாம் என்ன பேசினாலும் சிலர் ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டுதான் இருக்கப்போகிறார்கள்.

எனவே நாம் நமது மனதில் பட்டதை தைரியமாகவே பேசலாம். ஏனெனில் மற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள் என் பதற்காக நாம் மனதில் பட்டதை பேசாமல் இருக்க முடியாது.

புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும்.அந்த அதிர்வு நல்லதுக்காகமட்டுமே பயன்பட வேண்டும். மக்கள் என் பக்கம் உள்ளனர். என்னை இயக்குவது இறைவன். என் பின்னால் இருப்பது ரசிகர்கள். நீங்கள்தான் என்னை வாழ வைக்கின்றீர்கள்.

மழைக்காலங்களில் தேவைப்படுபவருக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் செய்யுங்கள் தமிழ்நாடு முழுவதும் ஆரம்பிக்க விரும்புகிறேன். முதற்கட்டமாக சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மாணவர்களுக்கான பயிற்சி மையங்களைத் தொடங்க உள்ளோம்.

நடப்பு கல்வி ஆண்டிற்காக அடுத்த 15நாட்களுக்குள் இவை செயல்பாட்டுக்கு வரும், அடுத்த கல்வி ஆண்டிற்குள் தமிழகம் முழுவதும் இவற்றை விரிவுபடுத்தத்திட்டமிட்டுள்ளோம்.. நிச்சயம் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் டிக்கெட் வைத்திருந்த ரசிகர்களையும் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் அரங்கின் வெளியே இருந்த இரும்பு கதவுகள் மூடப்பட்டதால் ரசிகர்கள்விரக்தியுடன் வெளியேறினர். இதற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள சமூகவலை தளப்பதிவில் கூறுகையில்,

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமு டியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடையதவறு ? என்றுநான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்குப் பொறுப் பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு" என்று கூறினார்.

SCROLL FOR NEXT