சினிமா செய்திகள்

லியோ சிவகுமார் - ராதிகா சரத்குமார் நடிக்கும் 'டெலிவரி பாய்' எப்போது ரிலீஸ்?

இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெலிவரி பாய்'.

சென்னை,

நடிகர் லியோ சிவகுமார், பிரிகிடா, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'டெலிவரி பாய்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

உணர்வுப்பூர்வமான கதைக்களம்

இயக்குநர் நானி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெலிவரி பாய்'. இப்படத்தில் லியோ சிவகுமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், துஷ்யந்த், காளி வெங்கட், போஸ் வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குடும்பப் பின்னணியில் உணர்வுப்பூர்வமான கதையுடன் உருவாகியுள்ள இப்படம், தனது தாயைக் காப்பாற்றப் போராடும் ஒரு டெலிவரி பாய் இளைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.

42 நாட்களில் நிறைவடைந்த படப்பிடிப்பு

சென்னை மற்றும் கோவையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. மொத்தம் 42 நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பிரசன்ன குமார் கவனித்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை வசந்த் மேற்கொண்டுள்ளார்.

நவம்பர் 27-ல் திரைக்கு வருகிறது

முதலில் இப்படம் அக்டோபர் 23-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் லியோ சிவகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தீபாவளி வாழ்த்துகளுடன் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, 'டெலிவரி பாய்' திரைப்படம் வரும் நவம்பர் 27-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

SCROLL FOR NEXT