சினிமா செய்திகள்

"வாடிவாசல்" படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்.. புதிய அப்டேட்

சூர்யா நடிக்கவுள்ள 'வாடிவாசல்' படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது.

சென்னை,

நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, படப்பிடிப்பு பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

ஆனால், இதுவரை படப்பிடிப்பு பணிகள் ஆரம்பிக்கப்படாததால், இதற்கான பணிகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.இந்த நிலையில், 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஒவ்வொரு மாதத்திலும் 10 நாட்கள் கால்ஷீட் தருவதாக நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறனிடம் ஓப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா தற்போது, வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சிம்புவை வைத்து 'அரசன்' படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT