சென்னை,
ரசிகர் ஒருவர், “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்று பிரியா வாரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்த அவர், “நீங்கள் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்? நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்!” என்று தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் நடிகை பிரியா வாரியர். மோகினியாட்டக் கலைஞரான இவர், 2017-ம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ‘ஒரு அடார் லவ்’ மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் கண் சிமிட்டும் காட்சியின் மூலம் ஒரே இரவில் இந்திய அளவில் பிரபலமானார்.
தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குட் பேட் அக்லி’, ‘சர்வம் மாயா’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாகின.
இதற்கிடையில், இவர் அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாக உள்ள ‘டேர் டெவில்’ படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர், “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என்று பிரியா வாரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு சுவாரஸ்யமாக பதிலளித்த அவர், “நீங்கள் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்? நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்!” என்று தெரிவித்துள்ளார். பிரியா வாரியரின் இந்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.