சினிமா செய்திகள்

ஜனநாயகனை கடைசி படம் என அறிவித்தது ஏன்? நடிகர் ஷாமிடம் பகிர்ந்த விஜய்

'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய திரைப்படமாக அமையும் என்று ஷாம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக வெற்றி கழகத் தலைவரும் நடிகருமான விஜய் தற்போது தீவிர அரசியல் களம் இறங்கியுள்ளார். 'ஜனநாயகன்' படம்தான் தனது கடைசி படம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அரசியலில் கால் பதித்திருப்பதால் 'ஜனநாயகன்' படத்தோட தனது சினிமா கேரியரை முடித்து விடுவதாகவும் இனி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் கூறியிருந்தார்.

விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி திரை துறையினரையும் விஜயின் இந்த முடிவு அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் நடிகரும் விஜயின் நண்பருமான ஷாம், விஜய்யிடம் இதுதொடர்பாக பேசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஷியாம் கூறுகையில், 'ஜனநாயகன்' தான் கடைசி படம் என அறிவித்தது ஏன் என்று விஜய் இடம் கேட்டேன். ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தினால் தான் சாதிக்க முடியும் என்று விஜய் கூறினார்" என்று ஷாம் தெரிவித்தார்.

மேலும் 'ஜனநாயகன்' எப்போது ரிலீஸ் ஆனாலும் மிகப்பெரிய திரைப்படமாக அமையும் தமிழ் சினிமா உலகில் உள்ள அனைத்து ரெக்கார்டுகளையும் முறியடிக்கும் என்றும் ஷாம் நம்பிக்கை தெரிவித்தார்