சினிமா செய்திகள்

“தி ஒடிசி” படத்தில் கருப்பின நடிகர்களை நடிக்க வைத்தது ஏன்? இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் விளக்கம்

கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிசி’ திரைப்படம் வரும் ஜூலை 17-தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வாஷிங்டன்,

உலகப் புகழ் பெற்ற ‘பேட்மேன்: தி டார்க் நைட்’, ‘இன்டர்ஸ்டெல்லார்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன். இவரது திரைப்படங்கள் சுவாரஸ்சியமான, அதே சமயம் தலையை சுற்ற வைக்கும் திரைக்கதைக்கு பெயர் பெற்றவையாகும். குறிப்பாக ‘இன்செப்ஷன்’, ‘தி பிரெஸ்டீஜ்’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதைகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. தனது படங்களில், ரசிகர்களுக்கு துல்லியமான காட்சி அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘ஐமேக்ஸ்’ கேமராவை நோலன் அதிகமாக பயன்படுத்துகிறார். மேலும், கிராபிக்ஸ் காட்சிகளை முடிந்த அளவு குறைவாக பயன்படுத்தவும் நோலன் விரும்புவார் என்று கூறப்படுகிறது.

கிறிஸ்டோபர் நோலன் தற்போது ‘தி ஒடிசி’என்ற படத்தை இயக்கி வருகிறார். கவிஞர் ஹோமரின் கிரேக்க புராண காவியத்தை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் எடுக்கும் முதல் புராண கதை இது என்பதால் படத்துக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜூலை மாதம் இப்படம் ரிலீசாகிறது.

அதே சமயம், இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக 'ஹெலன்' கதாபாத்திரத்தில் நடிகை லூபிடா நியாங்கோ மீது விமர்சனங்கள் சீறி பாய்ந்துள் ளன. கதையில் வரும் 'ஹெலன்' என்ற பெண், ஒரு பேரழகியாக வர்ணிக்கப்படுகிறார். இத்த கைய கதாபாத்திரத்தில் கருப்பினத்தை சேர்ந்த ஒரு நடிகையை நடிக்க வைக்கலாமா? என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

ஹாலிவுட்டில் சமீப காலமாகவே பல திரைப்படங்கள் ‘வோக்’ கலாசாரம் வலிந்து திணிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதாவது கதைக்கு தேவைப்படாவிட்டாலும் சமூக நீதி, பன்முகத்தன்மை, பாலின சமத்துவம், தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் பல திரைப்படங்களில் இடம்பெறுவதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் எலான் மஸ்க் கூட விமர்சனத்தை கொட்டியுள்ளார். 'விருதுகளைப் பெறுவதற்காக நோலன் முயற்சிக்கிறார் என்றும், கிரேக்க மக்களை நோலன் அவமதித்துவிட்டார்' என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து கிறிஸ்டோபர் நோலன் “‘இலியட்’ என்ற காவியம் பெரும்பாலும் செவிவழியாகவே மக்களிடம் கடத்தப்பட்டு வந்துள்ளது. அதை குறிக்கும் விதமாகவே படத்தில் சில கருப்பின நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறேன். சர்ச்சையை ஏற்ப டுத்துவது என் நோக்கமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.