தமிழக முதல்-அமைச்சரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கடைசி படம் ஜனநாயகன். தேர்தலுக்கு முன்பே இந்த படம் வெளியாக இருந்தது. ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
இதற்கிடையே, விஜய் தற்போது முதல் அமைச்சராகியிருப்பதால் படத்தின் டைட்டில் கார்டு முதல்வர் விஜய் என்று மாற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது குறித்து பேசிய கேவிஎன் புராடெக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் நாராயணா, சட்ட விதிமுறைகள் அனுமதிக்கும் பட்சத்தில் டைட்டில் கார்டு மாற்றப்படும் என்று கூறியுள்ளார்.