கன்னட திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படங்களான கேஜிஎப் சாப்டர் 2 மற்றும் கேஜிஎப் சாப்டர் 2, பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்துப் வெளியானவை. இந்த இரண்டு படங்களும் இந்தியாவைத் தாண்டி உலகளவில் வசூலில் மாபெரும் சாதனை படைத்தன. இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், கேஜிஎப் சாப்டர் 3 குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் சூழலில், நடிகர் யாஷ் சமீபத்திய பேட்டியில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், “தற்போது ‘கேஜிஎப் 3’ உருவாகும் வாய்ப்பு இல்லை. நான் ‘டாக்சிக்’ மற்றும் ‘ராமாயணா’ முதல், இரண்டாம் பாகங்கள் ஆகிய படங்களில் பிஸியாக உள்ளேன். இருப்பினும், நானும் இயக்குநர் பிரஷாந்த் நீலும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்,” என தெரிவித்தார்.
மேலும், “மூன்றாம் பாகத்திற்கான சரியான கதை அமைய வேண்டும். அந்த கதை கிடைத்தவுடன் கண்டிப்பாக ‘கேஜிஎப் 3’ உருவாகும்,” என்றும் யாஷ் உறுதியளித்துள்ளார். இதனால், ‘கேஜிஎப் 3’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் மேலும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.