சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சுயசரிதை திரைப்படமாகுமா? ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு

ரஜினிகாந்த் தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டாராக...

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணம், பலருக்கும் உத்வேகத்தை அளிக்கும் ஒன்றாகும். கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பஸ் கண்டக்டராக பணியாற்றிய அவர், தனது விடாமுயற்சி மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டார்" என்ற உயரத்தை அடைந்தார்.

சுயசரிதை எழுதும் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த் தனது வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட சுயசரிதை புத்தகத்தை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுவயது முதல் சினிமாவில் உச்சம் தொட்டது வரை நடந்த முக்கிய சம்பவங்கள், வாழ்க்கைப் போராட்டங்கள் மற்றும் அனுபவங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயோபிக் திரைப்படம் குறித்து ஆலோசனை?

சுயசரிதை புத்தகம் மட்டுமின்றி, அதை திரைப்படமாக உருவாக்குவது குறித்தும் ரஜினிகாந்த் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்களுடன் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தினை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள தர்மன் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.