சினிமா செய்திகள்

’டியூட்-2’ படம் உருவாகுமா?.. அப்டேட் கொடுத்த இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

இயக்குநர் கீர்த்தீஸ்வரனிடம் ‘டியூட்-2’ திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ‘டியூட்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் கீர்த்தீஸ்வரன் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.100 கோடி வசூலை கடந்த ‘டியூட்’

பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார்.

மேலும் சரத்குமார், ரோகினி, நேகா ஷெட்டி, பரிதாபங்கள் ராகுல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது.

‘டியூட்-2’ குறித்து என்ன சொன்னார்?

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கீர்த்தீஸ்வரனிடம் ‘டியூட்-2’ திரைப்படம் உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “டியூட்-2 குறித்து பிரதீப் ரங்கநாதனிடம் பேசியுள்ளேன். இரண்டாம் பாகம் உருவானால், அது டியூட் படத்தின் நேரடி தொடர்ச்சியாகவோ அல்லது அதே கதையுலகை மையமாகக் கொண்ட புதிய கதையாகவோ அமையும்” என்று தெரிவித்தார்.

இந்த தகவலால் ‘டியூட்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.