சென்னை,
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம்‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். டூரிஸ்ட் பேமிலி படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் இப்படத்தை இயக்கியுள்ளார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருக்கும் இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பேண்டஸி காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 6ந் தேதி வெளியானது.
இந்த நிலையில், ‘வித் லவ்’ படம் முதல் நாளில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.