சினிமா செய்திகள்

தடைகளைத் தாண்டி முன்னேற பெண்கள் கற்றுக்கொண்டார்கள் - சந்தோஷ் பிரதாப் பாராட்டு

சென்னையில் நடந்த ‘சிக்னல் அட் 11.30’ படத்தின் இசை-டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சந்தோஷ் பிரதாப் கலந்து கொண்டு பேசினார்.

சென்னை,

சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள். என்றுமே அவர்களுக்கு தான் முதலிடம். எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் பெண்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள். அதற்கு இந்த படத்தின் இயக்குனரே எடுத்துக்காட்டு”, என்றார்.

காதல் கலந்த மர்மத் திரில்லர்

மலர்விழி நடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். பவ்யா திரிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், பூஜிதா பொன்னடா, ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஆர்யன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலர் ஸ்டூடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார்.

நள்ளிரவில் நடக்கும் மர்ம சம்பவம்

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு காதல் மற்றும் மர்மம் கலந்த திரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. நள்ளிரவில் நடைபெறும் ஒரு பயணத்தின்போது, சரியாக 11.30 மணிக்கு போக்குவரத்து சிக்னல் ஒன்றில் கதாநாயகனுக்கு எதிர்பாராத மர்மமான சம்பவம் நிகழ்கிறது. அந்தச் சம்பவம் அவரது வாழ்க்கைப் பாதையையே மாற்றியமைக்கிறது. அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பதே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது.

இசை-டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சந்தோஷ் பிரதாப்

இந்த நிலையில், சென்னையில் நடந்த படத்தின் இசை-டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சந்தோஷ் பிரதாப் பேசும் போது, "நாங்கள் எல்லோரும் இந்த படத்தின் கிரீடம் என்றால் அதன் மேல் உள்ள வைரம் இசையமைப்பாளர் இமான்தான். அவருடைய பாடலுக்கு நடனமாடி இருப்பது மகிழ்ச்சி. பல வருடங்கள் கழித்து சினிமாவில் ஒரு திரைப்படத்தில் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறேன் என்றால் அது இந்தப் படத்தில் தான். சமூகத்தில் பெண்கள் பலதுறைகளில் முன்னேறி விட்டார்கள். என்றுமே அவர்களுக்கு தான் முதலிடம். எப்போதும் பல தடைகள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்க்கவும் தாண்டி வரவும் பெண்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள். அதற்கு இந்த படத்தின் இயக்குனரே எடுத்துக்காட்டு”, என்றார்.

பூஜிதா பேசும்போது, "இந்த படத்தில் நடித்த எல்லோருமே தங்கள் எல்லைகளை தாண்டி வந்து நடித்திருக்கிறோம். திறமைக்கு என்றுமே மதிப்பு உள்ளது என்று நம்புகிறோம்", என்றார்.

SCROLL FOR NEXT