யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில், கோவாவில் நிலவிய போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லர் கதையாக ‘டாக்ஸிக்’ படம் உருவாகியுள்ளது.
இப்படம் கடந்த (மார்ச்) 19ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடைய வேண்டும் என கூறி வருகிற ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில், ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் ‘டாக்ஸிக்’ படம் வெளியாகும் என அறிவித்தது.பின்னர் ‘டாக்ஸிக்’ படக்குழு , படம் ஜூன் 4 அன்று படம் வெளியாகாது என்றும் விரைவில் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கை வெளியிட்டது.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த டீசர் கடும் விமர்சனங்களை சந்தித்தது . டீசரில் இடம்பெற்றுள்ள ஆபாச காட்சிகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்த நிலையில், ‘டாக்ஸிக்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.