சென்னை,
அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு நடிகர் பாலா பதிலளித்து பேசியதாவது’
”எனக்கு அரசியல் அறிவு கிடையாது. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வமும் எனக்கு இல்லை நான் அவ்வளவு பெரிய ஆளும் கிடையாது. என்னால் முடிந்த வரை, நான் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு கடைசி வரை மக்களுக்கு உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் என் நோக்கம்.
எனக்கு எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என்பதை நான் ஏற்கனவே பல இடங்களில் தெளிவுபடுத்திவிட்டேன். என் வாழ்நாளின் கடைசி வரை உழைத்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு மக்களுக்கு உதவிகள் செய்வதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு என் பயணம் தொடரும்.”
இவ்வாறு அவர் கூறினார்.