சினிமா

‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில், பூர்ணா

‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற பெயரில், ஒரு படம் தயாராகி வருகிறது.

தினத்தந்தி

விமல்ஆஷ்னா சவேரி ஜோடி நடிக்க, இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு என்ற பெயரில், ஒரு காதல்நகைச்சுவை படம் தயாராகி வருகிறது. ஏ.ஆர்.முகேஷ் திரைக்கதைவசனம் எழுதி டைரக்டு செய்கிறார். அவர் கூறியதாவது:

இது, காதல்நகைச்சுவை படம். இதில், பூர்ணா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். ஆனந்தராஜுக்கு சொந்த மான ஒரு கடத்தல் பொருள், சின்ன சின்ன திருட்டுகள் செய்யும் விமல், சிங்கம்புலி ஆகிய இருவரிடமும் மாட்டிக் கொள்கிறது.

இரண்டு பேரையும் ஆனந்தராஜின் அடியாட்கள் துரத்துகிறார்கள். போலீஸ் அதிகாரிகள் பூர்ணாவும், மன்சூர் அலிகானும் இன்னொரு பக்கம் துரத்துகிறார்கள். தன் கடையில் கைவைத்து விட்டார்கள் என்று ஒரு கடைக்

காரரும், அவர் கும்பலும் மற்றொரு பக்கம் துரத்துகிறார்கள். விமல், சிங்கம்புலி ஆகிய இருவரும் சிக்கினார்களா? என்பது ஒரு சுவாரஸ்யமான காட்சியாக வைக்கப்பட்டு இருக்கிறது.

பாடல்களை விவேகா எழுத, நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். சர்மிளா மாண்ரே, ஆ.சர்வண் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு