சினிமா விமர்சனம்

பரபரப்பான நீதிமன்றப் போராட்டம்... ‘சட்டமும் நீதியும்-2’ விமர்சனம்

இயக்குனர் பாலாஜி செல்வராஜ் இயக்கிய ‘சட்டமும் நீதியும்-2’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சினிமா செய்திப்பிரிவு

சென்னை,

'சட்டமும் நீதியும்' வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கிறது, 'சட்டமும் நீதியும்-2'

போலீஸ் அதிகாரியான பிரேம் சிலரால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலை வழக்கில் அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுகிறார்கள். கணவரின் கொலைக்குக் காரணமானவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரேமின் மனைவியும், வக்கீலுமான வரலட்சுமி சரத்குமார்.

இன்னொரு புறம், கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்கள் குற்றவாளிகள் அல்ல; நிரபராதிகள் என்று வாதாடுகிறார் வக்கீல் 'பருத்திவீரன்' சரவணன். கணவனை இழந்த மனைவியின் நீதி தேடும் போராட்டம் ஒரு பக்கம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வேண்டிய வக்கீலும் வாதம் மறுபக்கம் என நீதிமன்றத்தில் பரபரப்பு சூழ்கிறது. போலீஸ் அதிகாரி பிரேமை உண்மையிலேயே கொலை செய்தவர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை.

வக்கீலுக்கு உண்டான அனைத்து பரிமாணங்களிலும் மிளிர்கிறார், சரவணன். அவரது வாதம் ரசிக்க வைக்கிறது. எமோஷனல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். கம்பீரமும், கோபமும் கொண்ட வக்கீலாக, தனது கணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் மனைவியாக படம் முழுக்க அழுத்தமான நடிப்பை கொட்டியுள்ளார், வரலட்சுமி சரத்குமார். அவரது எல்லைமீறாத நடிப்பு ரசிக்க வைக்கிறது.

இன்ஸ்பெக்டராக வரும் பிரேம், சப்-இன்ஸ்பெக்டர்களாக வரும் கவிதா பாரதி, ஆறுபாலா மற்றும் சிவின், லாவண்யா, வினோத், பீட்டர், சந்திரன், பால் சம்பாரியா, பவன், அக்‌ஷயா, பிரியங்கா ரோபோ சங்கர், அபர்ணா சுந்தரராமன் ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

எஸ்.கோகுலகிருஷ்ணனின் ஒளிப்பதிவும், விபின் பாஸ்கரின் இசையும் படத்துடன் நம்மை இணைக்கிறது. நேர்த்தியான திரைக்கதை பலம். சில காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நேர்த்தியான திரைக்கதையில் காட்சிகளை அடுக்கு படம் முழுக்க நம்மை இணைத்து அழைத்து சென்று கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர் பாலாஜி செல்வராஜ்.

கிளைமேக்ஸ் காட்சி ஆச்சரியம்

SCROLL FOR NEXT