சினிமா விமர்சனம்

"ஆல் பாஸ்" - திரைப்பட விமர்சனம்

இயக்குனர் மைதீன் இயக்கத்தில் வெளியான "ஆல் பாஸ்" படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை,

ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோர் அண்ணன் - தம்பிகளாக பழகுகிறார்கள். மூன்று பேரின் குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். இதற்கிடையில் அந்த தொகுதி எம்.எல்.ஏ. பதுக்கி வைத்திருக்கும் ரூ.5 கோடியை மூன்று குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் எடுத்து வீட்டுக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். கிடைத்த பணத்தை பங்குபோட்டு தங்கள் வறுமையை போக்கிக்கொள்ளலாம் என்றும் குடும்பத்தினர் அனைவருமே முடிவு எடுக்கிறார்கள்.

ஆனால் இந்த பணம் வேண்டாம், அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுமாறு ஜெயபிரகாஷ் சொல்ல, முதன்முறையாக அவரது பேச்சை மூன்று குடும்பத்தாரும் உதாசீனப்படுத்துகிறார்கள். இதற்கிடையில் பணத்தை இழந்த எம்.எல்.ஏ. கொலைவெறியுடன் சுற்றித்திரிய... பணத்தை செலவு செய்யமுடியாமல் மூன்று குடும்பத்தினரும் தவிக்க... அடுத்து என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள துஷ்யந்த் அழுத்தமான நடிப்பால் அலங்கரிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள 'பிக்பாஸ்' ஜனனியும் 'ஸ்கோர்' செய்திருக்கிறார். இருவரிடையே வரும் காதல் காட்சிகள் ரசிப்பு.

ஜெயபிரகாஷ், சுப்பிரமணிய சிவா, பிரசன்ன பாலச்சந்திரன் ஆகியோரின் இயல்பான நடிப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது. அவர்களுக்கு மனைவிகளாக நடித்துள்ள செந்தில்குமாரி, வினோதினி, மோகனா ஆகியோரும் தங்கள் வேலையை குறையின்றி செய்து கொடுத்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ.வாக சரத் லோகித்ஷவா, கவுன்சிலராக சத்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக அருவி மதன் ஆகியோர் பொருத்தமான தேர்வு. சிறுவர்களாக சஞ்சய், கோகுல், நிகில் ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

தில் ராஜூவின் ஒளிப்பதிவும், ஜேம்ஸ் வசந்தன் இசையும் படத்துடன் ஒன்ற வைக்கிறது. எதார்த்தமான காட்சிகள் படத்துக்கு பலம். முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்சிங். திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றமும் இருக்கிறது. வடசென்னை வாழ்வியலை, ஒரு திரில்லர் கதையுடன் இணைத்து புதுமையான கதைக்களத்தில் படத்தை நகர்த்தி கவனம் ஈர்த்திருக்கிறார், இயக்குனர் மைதீன்.

ஆல் பாஸ் - கிட்டத்தட்ட

SCROLL FOR NEXT