சினிமா விமர்சனம்

“யோகிடா” - சினிமா விமர்சனம்

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

குற்ற சம்பவங்களுக்கு எதிராக துணிச்சலாக போராடும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரின் கதை.போலீஸ் இன்ஸ்பெக்டர் சாய் தன்ஷிகா தனது நேர்மையான பணிக்காக அடிக்கடி டிரான்ஸ்பர் ஆர்டரை வெகுமதியாக பெறுகிறார். வட சென் னையின் முக்கிய பகுதியான வியாசர்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிக்கு வருகிறார்.அங்கு கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டு முக்கிய ரவுடியாக வலம் வரும் கபீர் துகான் சிங்குக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் முட்டிக்கொள்கிறது. கபீர் துகான் சிங்கின் அண்ணன் சயாஜி ஷிண்டே மத்திய மந்திரியாக உள்ளார். இருவரும் சேர்ந்து சாய் தன்ஷிகாவுக்கு பல் வேறு வகைகளில் குடைச்சல் கொடுக்கிறார்கள்.ஒரு கட்டத் தில் சாய் தன்ஷிகாவை கொலை செய்யவும் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. இந்த சதித்திட்டங்களை சாய் தன்ஷிகா முறி யடித்தாரா, இல்லையா? என்பது மீதி கதை.

மிடுக்கான போலீஸ் இன்ஸ்பெக்டராக துடிப்பான நடிப்பை காட்டியுள்ளார் சாய் தன்ஷிகா. 'டூப் போடாமல் ஆக்சன் காட்சிகளில் 'ரிஸ்க்' எடுத்து அசத்தியிருக்கிறார். அடுத்த விஜய சாந்தி தயார்.சபீர் துகான் சிங்கின் வில்லத்தனத்தில் இன்னும் புதுமை சேர்த்திருக்கலாம். அரைத்த மாவையே கொடுத்திருக்கிறார்கள். சயாஜி ஷிண்டேவின் நடிப்பிலும் ஆச்சரியம் இல்லை.

மறைந்த மனோபாலாவின் நடிப்பு கவனம் ஈர்த்தாலும், அவருக்கு இன்னும் சிறப்பாக 'டப் பிங்கில் குரல் கொடுத்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவும். தீபக் தேவ் -அஸ்வமித்ராவின் இசையும் படத்துக்கு துணை நிற்கின்றன.

எஸ்.கே.பூபதியின் ஒளிப்பதிவும், தீபக் தேவ் அஸ்வமித்ராவின் இசையும் படத்துக்கு துணை நிற்கின்றன. பரபரப்பான காட்சிகள் பலம் என்றாலும், ஏற்கனவே பார்த்த காட்சிகளாக அவை உள்ளன. நீதிமன்ற பின்னணி காட்சிகளில் இன்னும் அழுத்தம் இருந்திருக்கலாம். பெரும்பாலான காட்சிகளை யூகிக்க முடிவது பலவீனம்.

வழக்கமான அதிரடி கதை என்றாலும் சமூகத்துக்கு தேவைப்படும் விஷயத்தை முன்னெ டுத்து, குற்ற செயல்களில் ஈடுபடும் ஆசாமிகளுக்கு குட்டு வைத்துள்ளார் இயக்குனர் கவுதம் கிருஷ்ணா.

யோகிடா -எருக்கம் பூ.