ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகிறது "அவதார்: பயர் அண்ட் ஆஷ்".. எதில், எப்போது பார்க்கலாம்?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் அவதார்: தி வே ஆப் வாட்டர் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்தது.

அதனை தொடர்ந்து அவதார் படத்தின் மூன்றாம் பாகமான அவதார்: பயர் அண்ட் ஆஷ் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இதில் படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட உலகளவில் ரூ.8000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ‘அவதார்: பயர் அண்ட் ஆஷ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற ஜூன் 24ந் தேதி டிஸ்னி பிளஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.