ஓ.டி.டி.

திருமணத்துக்கு பிறகு மனைவி வீட்டில் குடியேறும் ஹீரோ... ஓடிடியில் கலக்கும் காதல் படம்

இப்படம், தற்போது ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு பெண்கள் செல்லும் வழக்கம் மாறி, ஆண்கள் செல்லும் நிலை வந்தால் என்ன ஆகும்? என்ற கதை கருவில் உருவாகியுள்ள ஒரு காதல் திரைப்படம் தற்போது ஓடிடியில் கவனம் ஈர்த்து வருகிறது.

ஓடிடியில் வெளியான ரொமாண்டிக் காமெடி

ரொமாண்டிக் காமெடி திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்காக தற்போது ஓடிடியில் ஒரு திரைப்படம் வெளியாகியுள்ளது. நவீன கால காதல் உறவுகள் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய எதிர்பார்ப்புகளை நகைச்சுவையுடன் காட்டும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த 21-ம் தேதி முதல் நெட்பிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.

மாறுபட்ட கோணத்தில் நகரும் கதை

இத்திரைப்படத்தின் பெயர் ‘பியார் பிரேமா கல்யாணம்’. வழக்கமான காதல் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகி சமூக வலைதள இன்ப்ளூயன்ஸராக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு தனது பெற்றோரை விட்டுப் பிரியக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இதனால், கதாநாயகன் தனது மனைவிக்காக(கதாநாயகி) மனைவியின் வீட்டிற்கே வந்து வசிக்க தொடங்குகிறார். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

“பெண் ஏன் தனது வீட்டை விட்டுச் செல்ல வேண்டும்?”

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு பெண்கள் செல்லும் வழக்கம் மாறி, ஆண்கள் செல்லும் நிலை வந்தால் என்ன ஆகும்? என்ற அழுத்தமான கேள்வியை இப்படம் முன்வைக்கிறது. காதல் மற்றும் ரொமான்டிக் காட்சிகளுடன் குடும்ப நகைச்சுவை, உணர்வுபூர்வமான தருணங்கள் என பல்வேறு அம்சங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன.

நடிகர்களின் நடிப்புக்கு பாராட்டு

இப்படத்தில் சான்வி மேக்னா, இளன், ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம், தற்போது ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.