ஓ.டி.டி.

“என்ன விலை” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படம் கடந்த செப்டம்பர் 17ம் தேதி வெளியானது.

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ படம் அக்டோபர்15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜீவ் பழூர் இயக்கத்தில் ‘என்ன விலை’ திரைப்படம் படம் கடந்த செப்டம்பர் 17ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் சஜீவ் பழூர் முதல்முறையாக இயக்குநராக அறிமுகமாகுகிறார். இவரது தொண்டி முதலும் திருக்ஷாக்ஷியும் படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் ரூ.1 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படம் தாதா​ சாகேப் பால்கே திரைப்பட விழா​வில் சிறந்த திரைக்​கதைக்​கான விருதை பெற்​றது.

மீனவரான தவசி முத்து ராமேஸ்வரத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தங்க ஆபரணத்தினால் அவரது வாழ்க்கையே தலைக்கீழாக மாறுகிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். போலீசார் ஆபரணத்தை கருணாசிடம் அபகரிக்க பார்க்கிறார்கள். அது முடியாமல் போக, கருணாசை கோவில் நகை கொள்ளை வழக்கில் போலீசார் சிக்கவைக்கிறார்கள். கருணாசை காப்பாற்ற வக்கீல் நிமிஷா சஜயன் சட்டப் போராட்டத்தில் குதிக்கிறார். கருணாஸ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கிறார். கருணாஸ் கேட்ட இழப்பீடு தான் என்ன? அதை நீதிமன்றம் செய்து தந்ததா? என்பதே மீதி கதை.

ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ படம் அக்டோபர்15ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT