ஓ.டி.டி.

"ஜாக்கி" முதல் "வித் லவ்" வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் இதோ!

இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

* "ஜாக்கி"

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் "ஜாக்கி". மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது. இப்படம் பிரைம் வீடியோ மற்றும் டென்ட கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

* "அன்னகாரு வஸ்தாரு"

நலன் குமாரசாமியின் இயக்கத்தில், கார்த்தி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான இத்திரைப்படம், "வா வாத்தியார்". இந்த படம் தெலுங்கில் அன்னகாரு வஸ்தாரு என்ற தலைப்பில் வெளியானது. இப்படம் நாளை தெலுங்கில் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

* "காந்தி டாக்ஸ்"

கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் "காந்தி டாக்ஸ்". இதில் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாமல் சைலன்ட் திரைப்படமாக உருவான காந்தி டாக்ஸ் படம் நாளை ஜீ5 ஓடிடியில் தளத்தில் வெளியாக உள்ளது.

* "விக்ரம் ஆன் டூட்டி"

மாலியக்கல் உடன், ஆசு ரெட்டி, காயத்ரி சகந்தி, ரகு, ஆர்யா, சமீர் ஆகியோர் நடிப்பில் உருவான படம் "விக்ரம் ஆன் டூட்டி". இந்த படத்தை பிரவீனா மற்றும் அனில் கடியாலா (ஞாபிகா என்டர்டெயின்மென்ட்ஸ்) தயாரித்துள்ளனர். இப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

* "க்ராணி"

விஜயகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "க்ராணி". இப்படத்தில் பழம்பெரும் நடிகை வடிவுக்கரசி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிங்கம் புலி, திலீபன், ஜீவி அபர்ணா, கஜராஜ், ஆனந்த் நாக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை சன்நெக்ஸ்ட் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.

* "டியர் ரதி"

பிரவீன் கே மணி இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் வெளியான படம் "டியர் ரதி". இந்த படத்தில் சரவண விக்ரம் மற்றும் ஹஸ்லி அமான் உள்ளிட்டோர் நடித்துள்ளார். இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

* "வித் லவ்"

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் "வித் லவ்" . காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் காவ்யா அனில், ஹரிஷ்குமார், சச்சின் நாச்சியப்பன், தேனி முருகன், ஆர்.ஜே.ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் நாளை (6ந் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.