திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி. தளங்கள் அதிக பிரபலம் அடைந்துள்ளதை அடுத்து, பல படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டு வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
"லாக் டவுன்"
லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள லாக் டவுன் திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த 11ந் தேதி பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"மேட் இன் கொரியா"
இயக்குனர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம் மேட் இன் கொரியா. இதில் நடிகை பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்று (12 ஆம் தேதி) வெளியாகி உள்ளது.
"பூக்கி"
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவான புதிய படம் “பூக்கி”. இயக்குனர் கணேஷ் சந்திரா இயக்கிய இந்தப் படத்தில் அஜய் திஷான் மற்றும் தனுஷா நடித்துள்ளனர். மேலும் பாண்டியராஜன், சுனில், லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் இன்று (13ந் தேதி) ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"கருப்பு பல்சர்"
முரளி கிருஷ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள படம் 'கருப்பு பல்சர்'. இப்படத்தில் ரேஷ்மா, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் இன்று டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"கிராணி"
வடிவுக்கரசி நடிப்பில் விஜயகுமரன் இயக்கத்தில் வெளியான ஹாரர் திரில்லர் திரைப்படம் “கிராணி”. இந்தத் திரைப்படம் விஜயா மேரி யுனிவர்சல் மீடியா சார்பாக தயாரிக்கப்பட்டது. இதில் வடிவுக்கரசி சூனியக்காரியாக மிரட்டும் வகையில் நடித்துள்ளார். இப்படம் இன்று டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"யோகிடா"
சாய் தன்ஷிகா நடிப்பில், கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான படம் யோகிடா . பெண்களை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாகும். இந்த படத்தில் தன்ஷிகா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராகப் போராடும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று பிரைம்வீடியோ, ஆஹா தமிழ், சிம்பிலி சவுத் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளது.
"ப்ரை டே"
'ப்ரை டே' என்பது 'கலக்கப் போவது யாரு' புகழ் தீனா நடிப்பில் வெளியான திரைப்படமாகும். இதில் தினாவுடன் இணைந்து மைம் கோபி மற்றும் அனிஷ் மசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ரசேனா மற்றும் சித்து குமரேசன் ஆகியோரும் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று சன்நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"கப்புல் பிரெண்ட்லி "
சந்தோஷ் சோபன் மற்றும் மானசா வாரணாசி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'கப்புல் பிரெண்ட்லி'. அறிமுக இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் காதல் கதையம்சம் கொண்டிருக்கிறது. தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் இன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
"பங்கி"
தெலுங்கு நடிகர் விஷ்வக் சேன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'பங்கி'. பிரபல இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கிய இந்த காமெடி நகைச்சுவை படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.
"ஜூடோபியா 2 "
டிஸ்னி நிறுவனத்தின் தயாரிப்பில் ஜாரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் ஆகியோரின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற அனிமேஷன் படம் ”ஜூடோபியா 2". 2016-ம் ஆண்டு வெளியான ஜூடோபியாவின் தொடர்ச்சியாக உருவான இந்த படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
மேலும் இதுதவிர, "ஒன் பீஸ் சீசன் 2 வெப் சீரிஸ், , பெண்ணும் போராட்டும், தட் நைட்" ஆகிய படங்களும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளன.
| படங்கள் | ஓடிடி தளங்கள் |
|---|---|
| லாக் டவுன் | பிரைம் வீடியோ |
| மேட் இன் கொரியா | நெட்பிளிக்ஸ் |
| பூக்கி | ஜீ5 |
| கருப்பு பல்சர் | டென்ட்கொட்டா |
| கிராணி | டென்ட்கொட்டா |
| யோகிடா | பிரைம்வீடியோ, ஆஹா தமிழ், சிம்பிலி சவுத் |
| ப்ரை டே | சன்நெக்ஸ்ட் |
| கப்புல் பிரெண்ட்லி | பிரைம் வீடியோ |
| பங்கி | நெட்பிளிக்ஸ் |
| ஜூடோபியா 2 | ஜியோ ஹாட்ஸ்டார் |