தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய்சேதுபதி. இவர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் காந்தி டாக்ஸ். இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வசனங்களே இல்லாமல் சைலன்ட் திரைப்படமாக காந்தி டாக்ஸ் உருவாகியுள்ளது. வசனங்களே இல்லாத படமாக இருந்தாலும் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களை வெகுமாக கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 26ந் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.