ஓ.டி.டி.

ஓடிடி ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. ‘துரந்தர் 2’ ஸ்ட்ரீமிங் தேதி வெளியானது

ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘துரந்தர் 2’ படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது.

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது. இந்த படத்தை பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தன.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மாதம் 19ம் தேதி வெளியானது. பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், 3 மணி 49 நிமிடங்கள் நீளமுடையதாகும். வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இதுவரை ரூ.1,800கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற 14ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT