பில்லி சூனியம் மற்றும் மாந்திரீக பின்னணியில் உருவான ஹாரர் திரைப்படமான 'சாத்தான் தி டார்க்' இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மணிகண்டன் ராமலிங்கம் இயக்கிய இப்படத்தில் எப்.ஜே, ஐரா பாலக், சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே மற்றும் ஸ்ரீஜா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'சாத்தான் தி டார்க்' திரைப்படம், இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஹாரர் பட விரும்பிகளுக்கு இப்படம் ஒரு சிறந்த விருந்தாக அமைந்தது. இந்நிலையில், திரையரங்கு வெற்றியைத் தொடர்ந்து இப்படம் இன்று (மே 8) பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.