ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் ‘மாலிவுட் டைம்ஸ்’.. எதில், எப்போது பார்க்கலாம்?

அபினவ் சுந்தர் இயக்கத்தில் நஸ்லன் நடிப்பில் வெளியான ‘மாலிவுட் டைம்ஸ்’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான நஸ்லன், 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து வெளியான 'ஆலப்புழை ஜிம்கானா' திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. மேலும், கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து நடித்த 'லோகா' திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், நஸ்லன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாலிவுட் டைம்ஸ்' திரைப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. சினிமா மீது தீவிர ஆர்வம் கொண்ட இளைஞன், சிறந்த ஹாரர் திரைப்படம் உருவாக்க முயற்சிக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. அபினவ் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரித்துள்ளார். இதில் ஷரப் யூ தீன், சங்கீத் பிரதாப், கோபிகா ரமேஷ், அல்தாப் சலீம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜூலை 3 முதல் ஓடிடியில்...

திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாலிவுட் டைம்ஸ்' திரைப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. அதன்படி, ஜூலை 3-ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து நஸ்லனின் புதிய படங்கள்

இதையடுத்து, நஸ்லன் நடித்துள்ள 'ஐ அம் காதலன்' திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும், இயக்குநர் காலித் ரஹ்மான் இயக்கும் புதிய படத்திலும் அவர் நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல், காலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் 'மட்டஞ்சேரி மாபியா' திரைப்படத்திலும் நஸ்லன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.