நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எல்வி சினிமாஸ் தயாரிப்பில் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அனிருத் இசையமைப்பில் உருவான பாடல்கள் கவனம் ஈர்த்திருந்தன. இதில் நாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும் மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘தசரா’ படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், ‘தி பாரடைஸ்’ படத்தில் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். ‘யேஷானகுலா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் இணையத்தில் வைரலானது.
நடிகர் நானி பாராட்டுக்கும் டிரோல்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். ‘தி பாரடைஸ்’ படம் நானியின் 33-வது படமாகும். இப்படத்தில், ‘தசரா’வைப் போலவே நானி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘தி பாரடைஸ்’ திரைப்படம் தாய்-மகன் கதையையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் அழுத்தமான உணர்வுகளையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 175 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இந்த நிலையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.