அமேசான் பிரைம் வீடியோ தளம், "நரி நரி நடுமா முராரி" திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராம் அப்பாராஜு இயக்கத்தில் ஷர்வானந்த் கதாநாயகனாக நடித்திருந்த படம் "நரி நரி நடுமா முராரி". அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரித்த இப்படத்தில் சம்யுக்தா மேனன், சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
கடந்த 14-ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், திரையரங்குகளில் வெளியான 21 நாட்களி்ல் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதன்படி, இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.