ஓ.டி.டி.

ஓடிடி-யில் இன்று களமிறங்கும் புதிய திரைப்படங்கள்... எங்கே பார்க்கலாம்?

இன்று எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

சென்னை,

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரத்தையொட்டி இன்று எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகின்றன என்பதை இப்போது பார்க்கலாம்.

"நூறு சாமி"

இயக்குனர் சசி, விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான 'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து சமீபத்தில் இவர்களது கூட்டணியில் வெளியான படம் 'நூறு சாமி' . இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்தபடம் தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"இதயம் முரளி"

ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நாயகனாக நடித்த 'இதயம் முரளி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. காதல் பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் அதர்வாவுடன் இணைந்து நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"லெனின்"

அகில் அக்கினேனி நடிப்பில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் 'லெனின்'. கிராமப்புற பின்னணியில் உருவான இந்த படத்தை முரளி கிஷோர் அப்பூரு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், சிவாஜி, பிரமோத் பஞ்சு, பிரம்மாஜி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"வதந்தி 2"

கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘வதந்தி’ வெப் தொடரின் அடுத்த பாகமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆப் மணி’ தற்போது பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த சீசனையும் ஆன்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இதில் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

"காட்டாளன்"

மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 'கட்டாளன்'. பால் ஜார்ஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படம், காடு மற்றும் உயிர் பிழைப்பை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ளது. இதில் ஆண்டனி வர்கீஸுடன் துஷாரா விஜயன், சுனில், சித்திக், ஜெகதீஷ், கபீர் துஹான் சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

"ஓ சுகுமாரி"

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் `ஓ சுகுமாரி'. இந்த படத்தை இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கியிருந்தார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வர ரெட்டி மூலி தயாரித்திருந்தார். இந்த படத்தில் இளம் நடிகர் திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.