ஓ.டி.டி.

நேரடியாக ஓடிடியில்...ஜி.வி.பிரகாஷின் ’லக்கி’ படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் ’லக்கி’ படம் நேரடியாக ஜியோஹாட்ஸ்டாரில் வருகிற 20-ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை கந்தசாமி மற்றும் புஷ்பா கந்தசாமி தயாரித்துள்ளனர். இப்படத்தில், அனஸ்வரா ராஜன், மேக்னா சுமேஷ், இளங்கோ குமரவேல், உதய் மகேஷ் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

மு மாறனின் ’பிளாக்மெயில்’ படத்தில் கடைசியாக நடித்த ஜி.வி. பிரகாஷ், ’இடிமுழக்கம்’, ’மென்டல் மனதில்’, ’ஹேப்பி ராஜ்’, மற்றும் ’இம்மார்டல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . மறுபுறம் அனஸ்வரா ராஜனின் ’வித் லவ்’ திரைப்படம் வருகிற 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT