ஓ.டி.டி.

‘மண்டாடி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது காணலாம்?

இந்தபடம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இந்தபடம் வரும் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் படத்தை காண தவறியவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

சூரியின் 'மண்டாடி'

சூரியின் நடிப்பில் கடந்த மாதம் 10ந் தேதி வெளியான படம் 'மண்டாடி'. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மண்டாடி' படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கை கதை

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது.

ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற “மண்டாடி" திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தியில் சூரியின் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

ஓடிடி ரிலீஸ்

இந்த நிலையில், இந்தபடம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தபடம் வரும் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தியேட்டர்களில் படத்தை காண தவறியவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.

SCROLL FOR NEXT