ஓ.டி.டி.

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா நடித்த 'ரணபாலி' படத்தின் ஓடிடி அப்டேட்

1876-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரையிலான பெரும் சென்னைப் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள 'ரணபாலி' திரைப்படம் நவம்பர் 13-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்றாவது முறையாக இணைந்த ஜோடி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'ரணபாலி'. இப்படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதற்கு முன்பு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த 'கீதா கோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில், மூன்றாவது முறையாக இந்த ஜோடி 'ரணபாலி' படத்தில் இணைந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுப் பின்னணியில் உருவான படம்

1876-ம் ஆண்டு முதல் 1878-ம் ஆண்டு வரையிலான பெரும் சென்னைப் பஞ்சத்தின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், காலனித்துவ அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் வீரனின் கதையையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இதில் விஜய் தேவரகொண்டா ரணபாலி என்ற வீரராகவும், ராஷ்மிகா மந்தனா ஜெயம்மா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ, ஆங்கிலேய அதிகாரி சர் தியோடர் ஹெக்டராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர்.

நவம்பர் 13-ல் ஓ.டி.டி. வெளியீடு

கடந்த அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலகளவில் சுமார் ரூ.80 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் ஓ.டி.டி. வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, நவம்பர் 13-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

SCROLL FOR NEXT