ஓ.டி.டி.

மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்ட ''பெத்தி'' படத்தின் ஓடிடி உரிமம்?

காதல் படமான உப்பெனாவின் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்குகிறார்.

சென்னை,

கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு பிறகு ராம் சரண் ''பெத்தி'' படத்தில் நடித்து வருகிறார். காதல் படமான உப்பெனாவின் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில், ''பெத்தி'' படத்தின் ஓடிடி உரிமை நெட்பிக்ஸ் நிறுவனம் ரூ. 105 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.

SCROLL FOR NEXT