ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் “எல்ஐகே” ... எதில், எப்போது பார்க்கலாம்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான ‘எல்ஐகே’ திரைப்படம் மே 6ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸாகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லவ், பேண்டஸி கதைக்களத்தில் வெளியான இந்த படம் இளசுகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ‘எல்ஐகே’ திரைப்படத்தின் ‘தீமா’ வீடியோ பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ‘எல்ஐகே’ படம் ரூ 61 கோடி வசூலை ஈட்டியுள்ளது.

இந்நிலையில், ‘எல்ஐகே’ திரைப்படம் மே 6ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.