கிரைம் திரில்லர் திரைப்படமாக ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ வரும் நவம்பர் 27ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ . இந்த படத்தை சுங்கத்துறை அதிகாரியாகப் பணியாற்றும் டி. சமய முரளி எழுதி இயக்கியிருந்தார்.
தனது சுங்கத்துறை விசாரணைகளில் கிடைத்த உண்மைச் சம்பவங்களையும், தான் எழுதிய புலனாய்வு நாவலையும் அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்.
இப்படத்தில் சரண் சக்தி, ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார், மைம் கோபி, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன், பால சரவணன், ஜாபர் சாதிக், ஸ்மேகா மணிமேகலை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ். ராம்பிரகாஷ், எஸ்.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார். சாம் டேனியல் இசையமைக்கிறார்.
உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், கடத்தல் உலகின் செயல்பாடுகளையும் சுங்கத்துறை விசாரணைகளையும் மையமாகக் கொண்ட கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான இப்படம் கடந்த அக்டோபர் 30ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சரண் சக்தி, ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா நடித்த ‘எனிமி ஆப் தி ஸ்மக்ளர்’ படம் வரும் நவம்பர் 27ந் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.