ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த 'தி கேம்' வெப் சீரிஸ்

மிஸ்ட்ரி திரில்லர் கதையில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒன்றில் நடித்துள்ளார்.

தினத்தந்தி

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தமிழில், விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை, மாறா, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது , மிஸ்ட்ரி திரில்லர் கதையில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துள்ளார். இதற்கு

தி கேம்: யு நெவெர் பிலே அலோன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் உடன் சாந்தோஷ் பிரதாப், சந்தினி, சயமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சாந்த், தீராஜ் மற்றும் ஹேமா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த வெப் சீரிஸை தீப்தி கோவிந்தராஜன் எழுத்தில் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஒரு பெண் கேம் டெவலப்பர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எதிர்கொள்ளும் மர்மமான டிஜிட்டல் தாக்குதலை கண்டறியும் முயற்சி தான் தொடரின் முக்கிய அம்சம். இந்த தொடர் வருகிற அக்டோபர் 2ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து