ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் சுதர்ஷன் கோவிந்தின் “நீ பாரெவர்”... எதில், எப்போது பார்க்கலாம்?

சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடித்துள்ள ‘நீ பாரெவர்’ படம் வரும் 24-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ பாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஜென் ஸ்டூடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கும் இப்படத்துக்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார். நாளைய இயக்குநர் 6-வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மிஸ் சவுத் இந்தியா அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் ரூ.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 24ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.