ஓ.டி.டி.

ஓடிடியில் ’உஸ்தாத் பகத் சிங்’ ... பவன் கல்யாணின் ஆக்சன் படத்தை எதில், எப்போது பார்க்கலாம்?

இந்த படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ஐதராபாத்,

பவன் கல்யாண் நடிப்பில் வெளிவந்த ’உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியதைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாக தயாராகியுள்ளது.

நெட்பிளிக்ஸ் வரும் 16ஆம் தேதி முதல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

ஹரிஷ் ஷங்கர் இயக்கிய இந்த படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கன்னா, பார்திபன், ராவ் ரமேஷ், கே.எஸ். ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.