ஓ.டி.டி.

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ - எப்போது, எங்கு பார்க்கலாம்?

திரையரங்குகளில் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சென்னை,

‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி - இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான ‘பத்தா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான மூன்றாவது திரைப்படம் ‘பத்தா’. இதற்கு முன்பு இவர்கள் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

அட்லீ தயாரிப்பில் உருவான படம்

இயக்குநர் அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனம், ‘ஸ்டார் ஸ்டுடியோஸ் 18’ மற்றும் ‘சினி1 ஸ்டுடியோஸ்’ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. ரவுடியாக வலம் வரும் கதாநாயகன் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அந்தச் சிக்கலுக்குக் காரணமானவர் யார் என்பதையும், அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதையும் மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சுவாரசியமான கதைக்களத்துடன் உருவான இப்படம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

அக். 29-ல் ஓடிடி வெளியீடு?

திரையரங்குகளில் படத்தைப் பார்த்த ரசிகர்கள், ஓடிடி வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 29-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து படக்குழுவோ அல்லது நெட்பிளிக்ஸ் நிறுவனமோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

SCROLL FOR NEXT