ஓ.டி.டி.

ஓடிடி ரிலீஸுக்கு தயாரான 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்'

தியேட்டர்களில் படத்தை காணத் தவறியவர்கள் இனி வீட்டில் இருந்தபடியே ஓடிடி தளத்தில் படத்தை கண்டு ரசிக்கலாம்.

'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சூர்யாவின் 46-வது திரைப்படமாக உருவான இப்படத்தை நாக வம்சி தயாரித்துள்ளார். இதில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் கதை

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் 40 வயது தொழிலதிபராக சூர்யா நடித்துள்ளார். அந்தக் குழந்தைக்கு ஏற்படும் அரிய வகை உடல்நலக் குறைபாட்டை குணப்படுத்த அவர் மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாகக் கொண்டு குடும்ப உணர்வுகளுடன் இப்படம் உருவாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல குடும்பத் திரைப்படம் என்ற வரவேற்பை பெற்ற இப்படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓடிடி ரிலீஸ்

தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 11-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தியேட்டர்களில் படத்தை காணத் தவறியவர்கள் இனி வீட்டில் இருந்தபடியே நெட்பிளிக்ஸ் தளத்தில் படத்தை கண்டு ரசிக்கலாம்.

SCROLL FOR NEXT