ஓ.டி.டி.

வருண் தேஜ் நடித்த ‘கொரியன் கனகராஜு’ படம்.. ஓடிடியில் வெளியாவது எப்போது?

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து ‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.

‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரர், காமெடியில் ‘கொரியன் கனகராஜு’

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் வருண் தேஜ். வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது ஹாரர் மற்றும் காமெடி கலந்த ‘கொரியன் கனகராஜு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மெர்லபாகா காந்தி இயக்கியுள்ள இந்த ஹாரர் காமெடி திரைப்படத்தில் ரித்திகா நாயக் கதாநாயகியாக நடித்துள்ளார். சத்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வித்தியாசமான கதைக்களம்

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ராயலசீமாவைச் சேர்ந்த கனகராஜு என்ற இளைஞனின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக கொரிய நபரின் ஆவி புகுந்துவிடுகிறது. அதன்பிறகு அவரது வாழ்க்கையில் ஏற்படும் வித்தியாசமான சம்பவங்களே படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளன.

கனகராஜுவாக வருண் தேஜும், சைத்ராவாக ரித்திகா நாயக்கும் நடித்துள்ளனர். கனகராஜுவின் நண்பர் கிருஷ்ணப்பா கதாபாத்திரத்தில் சத்யா நடித்துள்ளார். கொரிய கலாசாரத்தின் மீதான ஈர்ப்பு, ஆவியின் பின்னணி மற்றும் அதைச் சுற்றி நடக்கும் நகைச்சுவையான சம்பவங்கள் என படம் உருவாகியுள்ளது.

ஓடிடி வெளியீடு

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ‘கொரியன் கனகராஜு’ திரைப்படம் செப்டம்பர் 4-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் படத்தை தவறவிட்ட வருண் தேஜ் ரசிகர்கள், வரும் வெள்ளிக்கிழமை முதல் ஓடிடியில் இப்படத்தை பார்க்கலாம்.

SCROLL FOR NEXT