ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஆர்.பி டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ மற்றும் ‘சத்ய சோதனை’ உள்ளிட்ட படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சுரேஷ் சங்கையா. இதன் இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்தனர். ‘கெணத்த காணோம்’ படம் கடந்த மார்ச்13ம் தேதி வெளியானது.
யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக தியாகராஜன், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘கெணத்த காணோம்’ திரைப்படம் வரும் வரும் ஜூன் 16 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.