சினிமா

கவர்ச்சிக்கு ஆடை குறைப்பு அவசியமில்லை; அமைரா தஸ்தூர் கருத்து

நடிகை அமைரா தஸ்தூர் சமீபத்திய பேட்டியில் நடிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமைரா தஸ்தூர், 2015-ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் பஹீரா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தற்போது இந்தி மற்றும் பஞ்சாபி திரைப்படங்களிலும் பிஸியான நடிகையாக உள்ளார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் அமைரா தஸ்தூர், சமீபத்திய பேட்டியில் நடிகைகளுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகைகளின் பலம்

அவர் கூறுகையில், “பார்ப்போரின் மனதை கவரக்கூடிய கண்கள்தான் நடிகைகளுக்கு மிகவும் முக்கியமானவை. கவர்ச்சி என்பது ஆடை குறைப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு பார்வையாலேயே ரசிகர்களை ஈர்க்க முடியும். எனவே நடிகைகளின் கண்கள்தான் அவர்களது மிகப்பெரிய பலம்” என்று தெரிவித்துள்ளார். அமைரா தஸ்தூரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT